Thursday, August 8, 2019

டெங்கு

                      டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்னும் ஒரு வகை கொசுவினால் உண்டாக கூடியது தான் டெங்கு வைரஸ்.  இதன் அறிகுறி சுமார் 3 முதல் 14 நாட்களில் தெரிய வரும்.  டெங்கு ஒரு உலகளாவிய பிரச்சினையாகும். இது சுமார்  110 நாடுகளில்  பரவியுள்ளது. ஒவ்வொரு வருடமும்  50 முதல் 528 மில்லியன்  மக்கள்  டெங்குவினால்  பாதிக்கப்படுகிறர்கள். இதில்  சுமார்  10000 முதல்  20000  பேர்  மடிகிறார்கள்.
                                           Credit - Dharsan communication
                        அறிகுறிகள்
                       டெங்குவினால்  பாதிக்கப்பவர்களில்  (80%)  பேர்   எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் இருப்பர். சிலருக்கு  சாதாரண  காய்ச்சல் மட்டுமே இருக்கும்.   மற்றவர்கள்  (5%)  கடுமையான  நோயினால்  பாதிக்கப்படுவார்கள். இறப்பு  கூட  நேரிடலாம்.  சாதாரணமாக  பாதிக்கப்பட்டவர்களுக்கு   காய்ச்சல், தலைவலி, மூக்கில்  ரத்தம்  வடிதல், தசை மற்றும் மூட்டுகளில்  வலி,  தோல்  தடித்தல், வாந்தி  மற்றும்  வயிற்றுப்போக்கு  ஏற்படும்.   கடுமையாக  பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த ரத்த  அழுத்தம், நீர்க்கோர்வை,  இரைப்பை  குடல்  இரத்தப்போக்கு,  நுரையீரல்  நீர்மத்தேக்கம்  ஆகியவை  ஏற்படும்.
  மீட்புக்கட்டம்-- நினைவில்  மாற்றம்,  வலிப்பு,  அரிப்பு  மற்றும்  குறைந்த  இரத்த  அழுத்தம். 
                      சில  கர்பிணி  பெண்களுக்கு  கருச்சிதைவு  ஏற்படலாம்,  குறைந்த  அளவு எடையுடனோ  அல்லது  குறைமாத குழந்தையாகவும் பிறக்கலாம்.
                        அபாய  அறிகுறிகள்
                       தொடர்ந்த  வயிற்று வால்,  தொடர்ந்த  வாந்தி,  சளியுடன்  ரத்தம்  வடிதல்,  சோம்பேறித்தனம்  அல்லது   ஓய்வின்மை, உணவுக்குழல்  வெளிப்புற  படலம்  நீர்  கசிதல்  ஆகியவையாகும். 
                         அறிகுறிகள்  தோன்றியவுடன்  ம் அருகில்  உள்ள  மருத்துவரை  அணுகுவது  சால  சிறந்தது.  அவர்  நுண்ணுயிர்  லேப்  பரிசோதனைக்கு  பரிந்துரைப்பார்.
                        பரிசோதனை
                      இரத்த பரிசோதனையில் முதல் கட்டமாக  IgM  antibody டெஸ்டில் positive ஆக இருந்தால் 2ம்  கட்டமாக  (PRNT ) எனும் பரிசோதனை  செய்யப்பட்டு  டெங்கு வைரஸ்  இருப்பது உறுதி செய்யப்படும்.
                      ஆங்கில  மருத்துவத்தில்  ப்ரத்தியேகமாக  சிகிச்சை  எதுவும்  இல்லை.  உடல்  வறட்சிக்காக  ட்ரிப்ஸ்  ஏற்றிக்கொள்ளலாம்.  பெரியவர்கள்  குளிக்கலாம். குழந்தைகள்  மற்றும்  சிறுவர்களுக்கு  ஸ்பான்ஜ்  ஒத்தடம்  குடுக்கலாம். உடல்  வலிக்கு ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைப்பின் படி எடுத்துக்கொள்ளலாம்.  இளநீர், பழரசம்  போன்ற  உடல் சூட்டை  குறைக்கும்  உணவுகள்  எடுத்துக்கொள்ளம்.
                             

No comments:

Post a Comment

Lose Weight Casually 11-Pepper

                   In our day to day life, we use many spices without knowing which one gives what benefits. We use those spices for aroma ...