நாம் மழை மேகங்களின் தன்மை பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம். cumulus மேகம் பற்றி பார்த்தோம், இப்போது Stratus மேகம் பற்றி பார்ப்போம். இதை பதிவிடும் போது மழை சற்று ஓய்ந்திருக்கிறது.
.
ஸ்ட்ராடஸ் மேகம் ஒரு பெரிய சாம்பல் நிற போர்வை வானத்தில் விரித்தது போல் இருக்கும். இது தாழ்வாக பூமிக்கு மிக அருகில் இருக்கும். சில சமயம் பூமியில் படர்ந்து பரவி இருக்கும் அதனை மூடு பனி என்று அழைப்போம்.ஸ்ட்ராடஸ் மேகம் சூடாக இருக்கும் போது மழையாகவும் குளிராக இருக்கும் போது பனியாகவும் இருக்கும். 6500 அடியில் படர்ந்திருக்கும் ஸ்ட்ராடஸ் மேகம் பொதுவாக மழை இருப்பதில்லை, சிறு தூறல்களாக தான் இருக்கும்.
.
Stratus clouds |

ஸ்ட்ராடஸ் மேகம் சிறியதாகவும் காற்றினால் நீளமாகவும் படர்ந்திருக்கும். ஸ்ட்ராடஸ் மேகம் சூரிய ஒளியை மறைப்பது போல் படர்ந்திருக்கும். ஸ்ட்ராடஸ் மேகம் பல நாட்கள் தொடர்ந்திருக்கும். பருவ நிலை சிறிது குளிர் நிலையில் இருக்கும். தொடர்ந்து பல நாட்கள் நிலையான வானிலையே நீடிக்கும்.
மாலை 3pm முதல் 6pm வரை மேகம் சிறிது ஒன்று கூடியும் பழுப்பாகவும் இருப்பதின் காரணம் சூரியனின் தாக்கம் சிறிது குறைந்திருப்பதால் தான். வானில் படர்ந்திருக்கும் நீராவி சுருங்கி ஒன்று கூடி இருப்பதால் தான் வானிலை சிறிது மந்தமாக இருப்பது போல் தோன்றுகிறது.
நமது சின்ன ஆராய்ச்சியை சரியாக உள்ளதா என காண்போம். கோவையில் தற்சமயம் ஸ்ட்ராடஸ் மேகங்கள் பரவியுள்ளன. மேகங்கள் தாழ்வாக பூமியை படர்ந்துள்ள. பெரும் மழை இருக்காது என்று அறிகுறிகள் தெரிவதால் நான் குடை கொண்டு செல்லவில்லை. பார்ப்போம்.
பின் குறிப்பு : நீங்களும் உங்கள் ஊர்களில் பருவ நிலை அறிய மேகங்களை பயன் படுத்துங்கள். அடுத்த பதிவில் மேலும் ஆராய்வோம்.
பின் குறிப்பு : நீங்களும் உங்கள் ஊர்களில் பருவ நிலை அறிய மேகங்களை பயன் படுத்துங்கள். அடுத்த பதிவில் மேலும் ஆராய்வோம்.
)
No comments:
Post a Comment