Tuesday, August 13, 2019

மழை மேகம் அறிவோம்

               மழை இந்த முறை கொட்டி தீர்ந்துவிட்டது. மழை மேகம் என்பது என்ன? மேகம் பார்த்து மழை வருமா அல்லது வராதா என எப்படி அறிவது ?  நம் முன்னோர்கள் பருவம் அறிந்து பயிர் செய்தார்கள். எப்படி ? எந்த ஒரு உபகரணங்கள் செயற்கைகோள் எதுவும் இல்லாமல் எப்படி பலவற்றை கற்றார்கள், செய்தார்கள்? நாமும் தான் சிறிதாவது அறிந்துக் கொள்ளலாமே, என ஒரு சிறிய தேடல்.
              மேகம் என்பது என்ன, மேகத்தில் எத்தனை வகைகள் உள்ளன, எந்த வகை மேகம்  என்ன சொல்கிறது, ஏன் மேகம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
               மேகம் தண்ணீர் துளிகளால் ஆனவை. சிறு துளிகளாகவும் பெரிய துளிகளாகவும் ஆனவை. காற்று சிறு துளி  நீராவியை அண்டத்தில் மேலே நகர்த்தி  3300 அடி உயரத்தில் மேகத்தை தூக்கி வைத்திருக்கிறது. நீர் துளிகளின் அளவு பெரியதாக இருந்தால் பாரம் தாங்காமல் மழையாக மாறுகிறது,.  அவையே  குளிர் காலமாக இருந்தால் பனியாக மாறுகிறது.
               மேகம் 3 வகை காரணங்களால் பிரிக்கப்படுகிறது, அவை  வடிவும் , உயரம், மற்றும் மழை தரும் அளவு .  மேகம் 3 வகை வடிவம்  கொண்டிருக்கும். அவை         1.Cumulus மேகம்         2.Stratus மேகம்,         3. Cirrus மேகம்                                                                  
Image result for cumulus clouds
Cumulus clouds 
       
              Cumulus மேகம் வெப்பசலனம் காரணமாக காற்று மேல் நோக்கி நீராவியாக சென்று குளிர்ந்து மேகமாக மாறுகிறது. பின் அது சாதாரண நாட்களில் வளர்ந்து பல அளவுகளாக மாறுகிறது. சில நேரங்களில் வெள்ளையாகவும் சில நேரங்களில் பழுப்பு நிறத்திலும்  இருக்கும்.  பொதுவாக  மழை இருக்காது. cumulus மேகம்,  காற்றில் பஞ்சு மிதப்பது போல் இருக்கும்.  உயர்ந்த காற்று மேகத்தை மேலிருந்து அழுத்தும் போது பெரு மழை பொழிகின்றது.
              Cumulus மேகம் செங்குத்தாக வளரும்போது இடியுடன் கூடிய மழை ஏற்படலாம். நீராவி ஒடுக்கப்படுவதால் மிகப்பெரிய சக்தி உருவாகிறது. அதனால் இடியுடன் கூடிய மழை, மிகப்பெரிய சூறாவளி கூட ஏற்படலாம்.  Cumulus மேகம் பூமிக்கு அருகில் இருந்தால் கடும் பனியோ, மழையோ பெய்யக்கூடும் .
                 Cumulus மேகம் 5 முதல் 45 நிமிடங்கள் வரை நீடிக்கும். கருப்பு நிற cumulus  மேகங்கள் நமக்கு கூறுவது என்னவென்றால்   ஒரு தீவிர  வானிலை உருவாகிறது என்று பொருள்.  பெரு மழை, ஆலங்கட்டி மழை, இடியுடன் கூடிய மழை, சூறாவளி  ஆகியவை ஏற்படலாம் என்று பொருள்.

                  பின் குறிப்பு :                               
                  பதிவு நிறைவடையவில்லை.  அடுத்த பதிவுகளில் நாம் பலவற்றை அறிந்து கொள்ள முயல்வோம்.

       

No comments:

Post a Comment

Lose Weight Casually 11-Pepper

                   In our day to day life, we use many spices without knowing which one gives what benefits. We use those spices for aroma ...