ஆஸ்துமா இன்றைய நவீன உலகத்தில் ஒரு தவிர்க்க முடியாத அதிகரித்து வரும் வியாதியாகும். ஒரு வியாதி என்பது பல காரணங்களினால் வருகிறது. அவை பரம்பரை, உணவு (பால், முட்டை, வேர்க்கடலை, மரக் கொட்டைகள், சோயா, கோதுமை, மீன், மற்றும் உணவு சேர்க்கைகள் ஆஸ்துமாவைத் தூண்டும்), பழக்க வழக்கம்,(புகை பிடித்தல்) சுற்று சூழல் (மகரந்தம், தூசிப் பூச்சிகள், செல்லப்பிராணி அல்லது கரப்பான் பூச்சி கழிவுகளின் துகள்கள்), போன்றவையாகும். சில வகை மருந்துகள் உதாரணத்திற்கு ஆஸ்பிரின், வலி நிவாரணிகளான naproxen, ibuprofen மற்றும் இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் மற்றும் உணவு பொருள் பாதுகாக்க பயன்படும் சல்பைட் போன்ற காரணங்களினாலும் ஆஸ்துமா உண்டாகும்
கூடுதல் உடல் எடை, பஞ்சு மில், இரசாயன தொழிற்சாலை போன்ற இடங்களில் வேலை, கவலை, பதற்றம் போன்றவைகளாலும் ஆஸ்துமா உருவாகிறது.
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மூச்சு குழல் சுருங்கி, வீக்கம் ஏற்பட்டு, சளி அதிகம் ஏற்படுவதால் மூச்சு விட சிரமம், இருமல், ஏற்படுகிறது.
ஆஸ்துமா வகைகள்
- வயது வந்தோர் - ஆஸ்துமா தொடக்கம்
- ஒவ்வாமை
- நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD)
- உடற்பயிற்சி-தூண்டப்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி
- தொழில் ஆஸ்துமா
- மூச்சு விடுவதில் சிரமம்
- கடுமையான இளைப்பு
- வேகமாக மூச்சு விடுதல்
- மார்பு இறுக்கம்
- பேசுவதில் சிரமம்
- முகம் வெளிர்தல் மற்றும் வியர்த்தல்
கடுமையான ஆஸ்துமா வந்தால் முதலில் செய்ய வேண்டியவை
நெஞ்சம் நிமிருந்து அமர வேண்டும் பிறகு ஆசுவாசம் படுத்தி கொள்ள வேண்டும். மெதுவாக ஆழ்ந்த மூச்சு விட வேண்டும். ஆசுவாசம் படுத்திக்கொண்ட பின் சூடாக பருக சுடு தண்ணீர் அருந்த வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த inhaler அல்லது மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். பின்னர் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளல் அவசியம்.
குழந்தைகளுக்கான ஆஸ்துமா அறிகுறிகள் - விளையாடும் போது, அழும் போது, சிரிக்கும் போது, இரவிலோ தொடர்ந்து இருமல் வந்தால் மருத்துவரை கண்டிப்பாக அணுகவும்
.
தடுக்கும் முறைகள் .
- மருத்துவரை கலந்தாலோசித்து ஒரு திட்டம் வகுத்து அதனை பின்பற்றவும் .
- influenza மற்றும் pneumonia தடுப்பூசிகள் போட்டு ஆஸ்துமா தூண்டுதலை கட்டுப்படுத்தலாம்
குறிப்பு : ஆஸ்துமாவை பற்றி மேலும் குறிப்புகள் அடுத்த பதிவில் காண்போம்.
No comments:
Post a Comment